BREAKING NEWS

கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

கோவில்பட்டி செய்தியாளர் அ‌.சிவராமலிங்கம்.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் மனுஸ்மிருதி புத்தகம் அச்சிட்டு ஒரே நாளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்திருந்தார்.

 

 

அவரின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் பகுதிகளில் சென்று மனுஸ்மிருதி புத்தகத்தை இலவசமாக பொதுமக்களுக்கு விடுதலைச் சிறுத்தை கட்சியினர் வழங்கினர்.

 

 

நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி செயலாளர் முருகன், மாநில வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பெஞ்சமின், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் மாடசாமி, மாவட்ட துணை செயலாளர் பாஸ்டர் மோகன், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் விஜயா அந்தோணி, மாவட்ட செய்தி தொடர்பாளர் மனுவேல் ராஜ் உள்ளிட்ட

 

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இலவசமாக மனுஸ்மிருதி புத்தகத்தை வழங்கினர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )