தூத்துக்குடி, ஒட்டப்பிடார பகுதியில் உள்ள உப்பாத்து ஓடை தூர்வாரும் பணி கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடியில் மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, தற்போது வரை அவை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
மேலும், முத்தம்மாள் காலனி, ராம் நகர், ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர் ஆகிய பகுதிகளில் கால்வாய் அமைக்கும் பணிகள் மும்முரமாக வேலை நடைபெற்று வருகிறது.
ஒட்டப்பிடார சட்டமன்றம், வேலாயுதபுரம் கண்மாயில் இருந்து உப்பாத்து ஓடை வழியாக மழை நீர் கடலில் கலக்கும் வண்ணம் கண்மாயை துர்வாறும் பணி இன்று நடைபெற்றது.
எட்டயபுரம் சாலையில் உள்ள நிலா சி பூட்ஸ் அருகே இருந்து மூன்றரை கிலோ மீட்டர் தூரம் தூர் வாரும் பணிகளை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த காலம் மழை நீரால் முத்தமால் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்தது.
கடந்த காலம் சம்பவம் போல் நடைபெறா வண்ணம் பாதுகாக்கும் வகையில், ஒட்டப்பிடார சட்டமன்றம் ஓசநத்தம், ஆரைகுளம், புதியம்புத்தூர் பகுதியில் இருந்து வரும் மழை தண்ணிர் கடலில் நேரடியாக கலக்கும் வண்ணம் உப்பாத்து ஓடையில் உள்ள முட் செடிகள் தூர்வாரும் பணி நடைபெற்றது.
மேலும், இதனை துர் வாரும் பட்சத்தில், மழை நீரானது ஊர்களில், வீடுகளில் பாதிப்பு ஏற்படாது. தமிழக அரசும், மக்கள் பங்களிப்போடும் திட்டம் திட்டி சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார்.
இப்பணியின் போது, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் உடனிருந்தனர்.
பேட்டி அனிதா ராதாகிருஷ்ணன், மீன்வள மற்றும் கால்நடை துறை அமைச்சர்.