பேரணாம்பட்டு பழைய ஆம்பூர் ரோட்டில் கள்ளச்சார வியாபாரம் படு ஜோர்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நெடுஞ்சாலையில் வசிக்கும் அருள். என்பவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ராஜேஷ் கண்ணன். அவர்களுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி அதில் அவர் கூறி இருப்பதாவது பேரணாம்பட்டு பழைய ஆம்பூர் ரோட்டில் வசிக்கும் காலம் சென்ற. மகாலிங்கம் என்பவரின் மனைவி. பூமணி. என்பவர் தனது வீட்டிலேயே இரவும் பகலும் கள்ளச்சாராயம் விட்டு வருகிறார்.
இதனால் அங்கு கள்ளச்சாராயம் குடிக்க வருகை தரும் குடிமகன்கள் அவ்வழியே செல்லும் பள்ளி மாணவிகளை கேலியும், கிண்டலும்.
மேலும் ஆபாச வார்த்தைகளால் பள்ளி மாணவிகளை திட்டுவதாகவும் கூறப்படுகிறது இவர் வீட்டின் அருகிலேயே ரேஷன் கடை இருப்பதால்.
ரேஷன் கடைக்கு வரும் பெண்களையும் கிண்டல் செய்வதாகவும் எமக்கு தெரிய வருகிறது எனவே இது குறித்து ஐயா அவர்கள் நேரில் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.