அந்தியூர் அருகே யானை தாக்கி வாலிபர் படுகாயம்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் எப்பதாம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை வயது 34 இவர் இன்று காலை இவரது வீட்டின் அருகில் உள்ள வனப்பகுதியில் விறகு எடுக்க வனப்பகுதிக்குள் சென்றுள்ளார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக வனப்பகுதியில் புதர் மறைவில் இருந்த ஒற்றை யானை திடீரென அண்ணாதுரை தனது தும்பிக்கையால் தூக்கி விசிறியது.
இதனால் அண்ணாதுரை சத்தம் போட்டார் அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக யானையை விரட்டி விட்டு அண்ணாதுரையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
CATEGORIES Uncategorized