BREAKING NEWS

கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம்-ஜெயலட்சுமி இல்லத் திருமண விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மணமக்களை வாழ்த்தினர்.

கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம்-ஜெயலட்சுமி இல்லத் திருமண விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மணமக்களை வாழ்த்தினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் – ஜெயலட்சுமி இல்லத் திருமண விழா, கோவில்பட்டி – பசுவந்தனை சாலை சாய் சிட்டியில் நடைபெற்றது.

 

இதில் ஏ.பி.கே.பழனிச்செல்வம் – பி.ஜெயலட்சுமி ஆகியோரின் மகன் கே.பி.அரவிந் ராஜூக்கும், தூத்துக்குடி பார்த்திபன் – பொன்செல்வி ஆகியோரின் மகள் முத்துரோஷ்னிக்கும் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

 

 

திருமண விழாவிற்கு டாக்டர் கே.பி.அர்ச்சனா மற்றும் ஏ.பி.கே.பெரியசாமி – கிருஷ்ணவேணி, ஏ.பி.கே.தங்கமாரியப்பன் – ரத்தினலட்சுமி, ஏ.பி.கே.சேர்மக்கனி – இந்திரா, ஏ.பி.கே.பரமசிவபாண்டியன் – செல்வி ஆகியோர் வரவேற்றனர். 

 

 

இத்திருமண விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் நீலகண்டன்,நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், அதிமுக முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன்,

 

 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் ராஜகோபால், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் மூர்த்தி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவரும், மகாலட்சுமி, கல்வி அறக்கட்டளை சேர்மனுமான மகாலெட்சுமி சந்திரசேகர், கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன்,

 

அதிமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் வி.எஸ்.டி.பி.ராமர், விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், நகர்மன்ற துணைத்தலைவர் ரமேஷ்,

 

 

மதிமுக இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பழனிகுமார், ஜெய்சிங், குழந்தை ராஜ், முருகன், கோபி,உள்ளிட்ட தொழிலதிபர்கள், அரசியல் கட்சியினர், வர்த்தக பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )