ஆடு திருடிய நபர்களை சிசிடிவி காட்சி வீடியோ மூலம் இருவர் கைது,பத்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பகுதியில் விவசாயம் செய்து வருபவர் வடிவேல் அவரது விவசாய தோட்டத்தில் ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார்..
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அவரது விவசாயத் தோட்டத்தில் உள்ள ஆடு ஒன்று காணாமல் போனது இது குறித்து ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் ஆட்டை திருடி சென்றது தெரியவந்தது இதனையடுத்து சிசிடிவி கேமரா மூலம் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது.
ஆத்தூர் அருகே உப்போடை அருகே உள்ள காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் ராஜா (34) மற்றும் முல்லைவாடி கங்கை அம்மன் தெருவை சேர்ந்த துரைசாமி மகன் ஏழுமலை (49)ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த பத்தாயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் ஆடு திருடியதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து பின்னர் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஆத்தூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.