இருங்களூர் உப்பாற்றில் கார் கவிழ்ந்து 4 பேர் காயம்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உப்பாற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயம்.
திருச்சி அரியமங்கலம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் 78 வயதான பார்த்திபன் இவர் தனது உறவினர்களான 36 வயதான கரிகாலன், 48வயதான பிரபாகரன், 60 வயதான ரங்கநாதன் ஆகியோருடன் விழுப்புரத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்க்காக அரியமங்கலத்திலிருந்து விழுப்புரத்திற்கு மாருதி காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சமயபுரம் அருகே இருங்களூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உப்பாற்றின் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் காயமடைந்து அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
இது குறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் கிரேன் உதவியுடன் காரை பள்ளத்திலிருந்து மீட்னர். இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.