தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி திலகர் திடலில் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

தஞ்சையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒருங்கிணைக்கும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி திலகர் திடலில் நடைபெறுகிறது.
இது சம்பந்தமாக பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று 22.11.22 தஞ்சையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் தா. பாபு தலைமையில். பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமை நிலைய செயலாளர் கனல்.உ. கண்ணன் கூறியவாறு.
மாவீரன் நாள் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி வருடா வருடம் தொடர்ச்சியாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக ஒருங்கிணைக்கப்படுகிறது . கொரோனா காலகட்டத்தில் கூட தலைவர் தி. வேல்முருகன் இல்லத்தில் சிறிய அளவில் தொண்டர்களுடன் நடைபெற்றது.
அதுபோல இந்த ஆண்டு மாவீரன் நாள் நிகழ்ச்சியை தஞ்சையில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு அனைத்து நிகழ்ச்சி ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தஞ்சை திலகர் திடலில் மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் விவசாய சங்கம் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் திமுக கூட்டணியில் இருந்தாலும் காங்கிரசை எதிர்க்கின்றோம் எங்களது வாக்கு காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது. அதேபோல மதவாத பிஜேபியுடனும் எங்களுக்கு உடன்பாடு கிடையாது.
ஆகையால் எங்களது வாக்கு வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற பொது தேர்தலில் நோட்டாவுக்கு சுயேட்சை வேட்பாளருக்கோ வாக்களிப்போமே தவிர காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறினார்.
பின்பு நெய்வேலி N.l.C. கிடைக்கின்ற மின்சாரத்தை கர்நாடகா முதன்மையாகப் பெற்றுக் கொண்டு பின்பு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை தர மறுத்து தமிழக விவசாயிகளையும் தமிழகத்தையும் பாலைவனம் ஆக்க துடிக்கும் கர்நாடக அரசை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
வடமாநிலத்தில் தொழில் தொடங்க கையகப்படுத்தும் நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் தருகிறார்கள் தமிழகத்தில் வெறும் 25 லட்சம் கூட தரு மறுக்கிறார்கள் இதையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் .
மேல் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது கொடுக்க வேண்டிய ஒன்றுதான் ஆனால் அவர்களை சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி அது மூலியமாகவே அவர்களுக்கு இந்த ஒதுக்கீடை தர வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக கோரிக்கை முன்வைக்கின்றோம் .
சாதி மதம் இனம் மொழி கடந்து அனைவரும் இந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டத்திற்கு திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக அன்போடு அழைக்கிறோம் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.