மின்கட்டணம் செலுத்த ஒரேயொரு கவுன்டர் செயல்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்கும் மக்கள்.

செங்கை ஷங்கர், செங்கல்பட்டு.
செங்கல்பட்டு இராட்டிணங்கிணறு அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த ஒரேயொரு கவுன்டர் செயல்படுவதால் மின் கட்டணம் செலுத்த வருபவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளான நத்தம், ஜே.சி.கே.நகர், காத்தான் தெரு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 10ஆயிரம் குடும்பத்திற்கான மின் கட்டணம் செலுத்த இந்த மின்வாரிய அலுவலகத்தில்தான் செலுத்த வேண்டும். ஏற்கனவே மூன்றுக்கும் மேற்ப்பட்ட கவுன்டர்கள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரேயொரு கவுன்டர் மட்டுமே செயல்படுகிறது.
வேலைக்கு செல்பவர்கள் மின் கட்டணம் செலுத்திவிட்டு செல்லலாம் என இந்த மின்வாரிய அலுவலகத்தில் கட்டணம் செலுத்த வந்தால் ஒரேயொரு கவுன்டர் மூலம் கட்டணம் வசூலிங்கப்படுகிறதுஇதனால் உரிய நேரத்தில் பணிக்கு செல்ல முடியவில்லை. இதுகுறித்து அலுவலக அதிகாரிகளிடம் நியாயம் கேட்டால் ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கிறது.
மின்கட்டணம் வசூலிப்பவர்கள் விடுப்பில் இருக்கிறார்கள். அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். காத்திருந்துதான் கட்டணம் செலுத்த வேண்டும் என அலட்சியமாக பதில் சொல்திறார்கள் என மக்கள் புலம்புகின்றனர்.
கட்டணம் தாமதமாக செலுத்தினால் 150ரூபாய் முதல் 500ரூபாய் வரை அபராதம் வசூலிக்கும் மின் வாரியத்துறைக்கு பொதுமக்களை காத்திருக்க வைக்காமல் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தெரியாதா என கேள்வி எழுப்புகின்றனர்.