BREAKING NEWS

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உலக சாதனை நிகழ்வு .

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உலக சாதனை நிகழ்வு .

செங்கை ஷங்கர் செங்கல்பட்டு மாவட்டம்,

யாவரும் கேளீர் திறன் வளர் சங்கம் எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் இணைந்து நடத்திய உலக சாதனை நிகழ்வு.

 

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி வளாகத்தில் யாவரும் கேளீர் திறன் வளர் சங்கம் தொடர்ச்சியாக 99 வாரங்கள் வரலாறு, கணிதம், அறிவியல், உயிரியல் தாவரவியல், கணினி அறிவியல், என பல தலைப்புகளில் திறனறி தேர்வுகளை நடத்தியது. 100வது வாரமாக பெண் சாதனையாளர்கள் என்ற தலைப்பில் திறனறி தேர்வு நிகழ்வை நடத்தியது.

 

 

தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 10:30 மணி முதல் 11 மணி வரை 2500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திறனறி தேர்வில் பங்கேற்றனர்.

 

இந்த நிகழ்ச்சியை உலக சாதனையாக, கலாம் புக் ஆப் ரெக்கார்ட் பதிவு செய்து உலக சாதனைக்கான சான்றிதழ்களை யாவரும் கேளீர் திறன்வளர் சங்கத்திற்கு வழங்கினர். இந்த உலக சாதனை சான்றிதழ்களை யாவரும் கேளீர் திறன் வளர்ச்சங்கத்தின் நிறுவனர் மற்றும் பொருளாளர்
கௌரிராஜ், செயலாளர் இளந்தமிழன் , தலைவர் செல்வராஜ் மற்றும் துணைத்தலைவர் லோகாபிராமன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

 

 

யாவருக்கும் கேளீர் திறன்வளர் சங்கம் மற்றும் கலாம் புக் ஆப் ரெக்கார்ட் இணைந்து உலக சாதனை நிகழ்வில் தங்கள் கல்லூரி மாணவர்களையும் பங்குபெறச் செய்து, நிகழ்வையும் ஒருங்கிணைத்துக் கொடுத்த, எஸ் ஆர் எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியையும், கல்லூரியின் பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றத்தையும் கௌரவித்து உலக சாதனை நிகழ்வின் ஒத்துழைப்பு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.

 

 

இந்த சிறப்பு மற்றும் நினைவுச் சான்றிதழ்களை கல்லூரியின் முதல்வர் முருகன் பெற்றுக்கொண்டார். பாரிவேந்தர் மாணவர் மன்றத்தின் பங்களிப்பிற்கான சிறப்பு மற்றும் நினைவு சான்றிதழ்களை மன்ற ஒருங்கிணைப்பாளர் சண்முகம் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தமிழ் திரை பட நடிகர் ஆதித்யா கதிர் கலந்துகொண்டு தனது வாழ்த்துரையை வழங்கினார்.

இந்நிகழ்வில் எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்ற மாணவர்கள் எழுபதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். வினாடி வினா நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )