உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விருத்தாசலத்தில் திமுக வினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
கடலூர் மாவட்டம்,
தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்தநாள் இன்று தமிழக முழுவதும் திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு விருத்தாசலம் நகர திமுக மற்றும் இளைஞரணி சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடைவீதி, பாலக்கரை சந்திப்பு மற்றும் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி திமுகவினர் உதயநிதியின் பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் தண்டபாணி நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன்.கணேஷ், திமுக நகரமன்ற உறுப்பினர்கள், மற்றும் திமுக நகர நிர்வாகிகள் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES கடலூர்
TAGS Dmkஅரசியல்உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாகடலூர் மாவட்டம்கடலூர் விருத்தாசலம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திமுகவிருத்தாசலம்