புனரமைப்பு பணி நிறைவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த திருத்தேரி ஏரி.

செங்கை ஷங்கர், செங்கல்பட்டு.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில், 66ஏக்கர் பரப்பளவு கொண்ட திருத்தேரி பகுதியில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் ஏரி அமைந்துள்ளது.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த ஏரி பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமலும், சுற்றுவட்டார பகுதியில் இருந்நு கொண்டு வரப்படும் குப்பைகள் இறைச்சி கழிவுகள் இங்கு கொட்டப்பட்டதாலும்,
ஏரியை சுற்றி துர்நாற்றம் வீசுவதோடு ஏரி மாசடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவானதால் இந்த ஏரியை துார் வார வேண்டும் என, நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் கடந்த ஜீலை மாதம் சுமார் 40லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏரி புனரமைப்பு பணி துவங்கியது. ஏரியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள, ‘என்விரான்மென்டல் பவுண்டேசன் ஆப் இந்தியா’ என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் எரிகளில் கொட்டப்படும் குப்பை கழிவு நீர்கலப்பதை தடுத்து ஏரியை சுற்றி கொட்டப்பட்ட குப்பை மற்றும் கழிவுகளை அகற்றி குறிப்பிட்ட பருவங்களில் வரும் பறவைகள் அமர்வதற்கு வசதியாக மணல் திட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஏரிகளை துார் வாருதல்,
அகரைகளை பலப்படுத்துதல், கரையில் மரங்களை நடுதல் உள்ளிட்ட பணிகளை, அந்நிறுவனம் மேற்கொண்டது. இந்நிலையில் பணி முடிவடைந்த நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், ஏரியை மக்களின் பயண்பாட்டிற்க்கு துவக்கி வைத்தார்.
இதில் செங்கல்பட்டு தி.மு.க. எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் வட்டாட்சியர் நடராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.