ஆத்தூர் அருகே சொக்கநாதபுரம் குடியிருப்பு பகுதியில் இருந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சொக்கநாதபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் கருப்பன் மகன் குமரன் இவரது வீட்டின் அருகே சுமார் ஆறடி நீளமுள்ள விஷப்பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குமரன் உடனடியாக ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில்,..
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையை அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி ஆறடி நீளம் உள்ள விஷப்பாம்பை லாபகமாக பிடித்தனர். பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காப்பு காட்டில் பத்திரமாக விடப்பட்டது.
CATEGORIES சேலம்