BREAKING NEWS

தியாகராஜரின் 176 வது ஆராதனை விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது.

தியாகராஜரின் 176 வது ஆராதனை விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று  நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு ஆண்டுதோறும் 5 நாட்கள் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தியாகராஜர் ஆராதனை விழா அடுத்த மாதம் (ஜனவரி) 06 ம் தேதி, தொடங்கி 11 ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் பல்வேறு இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 

 

தியாகராஜர் முக்தியடைந்த பகுளபஞ்சமி தினமான ஜனவரி 11ம் தேதி தியாகராஜருக்கு பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறுது. விழாவில், பல்வேறு சங்கீத வித்வான்கள் கலந்து கொண்டு பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். அப்போது தியாகராஜருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.

 

 

இதற்காக திருவையாறில், ஆராதனை விழா பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதில், அறங்காவலர்கள் சுரேஷ் மூப்பனார், சபை நிர்வாகிகள் கலந்துகொண்டு பந்தக்கால் நட்டு வைத்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )