சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்.

சேலம் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை வாழப்பாடியில் நடைபெற்றது. வாழப்பாடியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை வகித்தார்.
செயற்குழு கூட்டத்தில் பேசிய சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சி வாலிங்கம் தேர்தல் வரும் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே களப்பணிகளை செய்வது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எதிரிகளை வீழ்த்துவது நமது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும் தொண்டர்களிடம் பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தார் மேலும் அடிமட்ட தொண்டர்களை மதித்து கட்சியை வளர்ப்பது ஒன்றிய செயலாளர்களின் முக்கிய பணி ஆகும் என தெரிவித்தார்.
கட்சியின் வளர்ச்சி பணிகள், வாக்குச்சாவடிகள் தோறும் 10 பேர் கொண்ட பூத் கமிட்டி குழு அமைத்தல், திமுக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கருணாநிதி, சுரேஷ்குமார், முன்னாள் சேலம் மாநகர மேயர் ரேகா பிரியதர்ஷினி, வாழப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ். சி.சக்கரவர்த்தி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.