ஸ்ரீரங்கத்தில் தெரு நாய் கருத்தடை மையத்தை திறந்து வைத்த மேயர் அன்பழகன்.

ஸ்ரீரங்கத்தில் தெரு நாய் கருத்தடை மையத்தை மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.
திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் மண்டலம் நான்காவது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் மயான வளாக பகுதியில் தெரு நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் மற்றும் ரேபிஸ் தடுப்பு ஊசி செலுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று ( 9ம் தேதி) மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் முன்னிலையில் மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், துர்கா தேவி, நகர் நல அலுவலர் ஷர்மிலி, செயற் பொறியாளர்கள் குமரேசன், பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் ரவி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருச்சி
TAGS அரசியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருச்சி மாநகராட்சிதிருச்சி மாவட்டம்தெரு நாய் கருத்தடை மையம்ஸ்ரீரங்கம்