தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து கழிவு நீர் கால்வாயில் இருந்த கல்லை அகற்றிய அதிமுக பெண் கவுன்சிலர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சி ஒன்றாவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் அதிமுக-வை சேர்ந்த சரஸ்வதி விஸ்வநாதன், இந்நிலையில் இவரது வார்டுக்கு உட்பட்ட வேடர் காலனி பகுதியில் சாக்கடை அடைத்திருப்பதாகவும்,
அதனை சரி செய்ய ஐந்து ஊழியர்கள் வேண்டும் என்றும் கேட்டுள்ளார், ஆனால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வெறும் இரண்டு ஊழியர்கள் மட்டுமே அனுப்பியுள்ளனர், இதன் காரணமாக சாக்கடை பகுதியில் இருந்த கல்லை அகற்ற முடியாமல் இரண்டு ஊழியர்களும் தவித்த நிலையில்,
சரஸ்வதியும் ஊழியர்களுடன் சேர்ந்து கல்லை அகற்றும் பணியில் ஈடுபட்டார். பேரூராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்பு இல்லாததன் காரணமாக ஒன்றாவது வார்டு பகுதியில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை முழுமையாக தீர்க்க முடியவில்லை என பேரூராட்சி நிர்வாகம் மீது கவுன்சிலர் சரஸ்வதி விஸ்வநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
CATEGORIES ஈரோடு