எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் திமுக அரசை கண்டித்து கொட்டும் மழையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, இந்த கண்டன ஆர்ப்பாட்டம் எடப்பாடி நகர செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது. மேலும், ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கோபி காளிதாஸ் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை அனுப்பினார்.

அதனை தொடர்ந்து, கொட்டும் மழை என்றும் பார்க்கமல் சுமார் 2000-க்கும் மேற்பட்ட அக்கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS அதிமுகஅரசியல்எடப்பாடி பேருந்து நிலையம்சேலம் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
