BREAKING NEWS

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை ஏற்றிய திமுக அரசை கண்டித்து ஈரோடு அதிமுக மாநகர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை ஏற்றிய திமுக அரசை கண்டித்து ஈரோடு அதிமுக மாநகர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம்,

பவானி அருகில் உள்ள மேட்டு நாசுவம் பாளையம் பஞ்சாயத்து பகுதியில் பால் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை ஏற்றிய திமுக அரசை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், முன்னால் ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான கே.வி. இராமலிங்கம் தலைமை வகித்தார்.

 

ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏவான தென்னரசு, மாநகராட்சி முன்னாள் துணைத் தலைவர் பழனிச்சாமி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் கேசவமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மேட்டு நாசுவம் பாளையம் பஞ்சாயத்து தலைவர் மகேஸ்வரன் வரவேற்று பேசினார்.

 

 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் இராமலிங்கம் பேசுகையில் திமுக அரசு பொறுப்பு ஏற்று ஒன்றை ஆண்டு காலத்தில் இந்த திமுக அரசு மக்களுக்கு பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு மற்றும் அத்யாசிய பொருட்கள் விலையேற்றம் போன்ற விலை ஏற்றங்களை செய்து மக்களை மிகுந்த இன்னலுக்கு ஆளாக்கி வருவதையே சாதனையாக செய்து உள்ளது என விளக்கிப் பேசினார்.

 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு அதிமுக ஒன்றிய செயலாளர் பூவேந்திர குமார், ஒன்றிய பொருளாளர் சரவணன் சித்தோடு பேரூராட்சி முன்னாள் தலைவர் வரதராஜன் ஊராட்சி கவுன்சிலர்களான பத்மாவதி லீலாவதி உட்பட அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )