கம்பம் காமயகவுண்டன்பட்ட வீட்டில் புகுந்த ஐந்தடி நீளம் கொண்ட பாம்பினைபிடித்த தீயணைப்புத் துறையினர்.

தேனி மாவட்டம் கம்பம் காமயகவுண்டம்பட்டி செல்லும் சாலையில் தனியார் பால் பண்ணை ஒன்று உள்ளது. இந்த பால் பண்ணையில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகின்றனர். இங்கு மாடுகளை பராமரிப்பதற்காக அதன் உரிமையாளர்கள் வீடு கட்டி அங்கேயே தங்கியுள்ளார்.
இந்நிலையில் மாட்டிற்கு தீவனம் அமைப்பதற்காக அங்கு உள்ள குடோன் பகுதியில் தீவனங்களை எடுக்க சென்றபோது அங்கு பாம்பு ஒன்று சுற்றித்திரிந்ததை கண்டுள்ளனர். இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக கம்பம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பெயரில் விரைந்து வந்த கம்பம் தீயணைப்புத் துறையினர் பகுதிக்குள் சுற்றித்திரிந்த பாம்பினை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். பாம்பு பிடிக்கும் கருவிக்கொண்டு லாபமாக பாம்பினை உயிருடன் பிடித்தனர். பிடிபட்ட பாம்பு 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பாகும்.
இதனை அடுத்து உயிருடன் பிடிபட்ட பாம்பினை பத்திரமாக மீட்டு கம்பம் வனப்பகுதிக்கு கொண்டு சென்று உயிருடன் விட்டனர்.