BREAKING NEWS

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 28ஆம் தேதி திருச்சி வருகை.

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 28ஆம் தேதி திருச்சி வருகை.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் அரியலூர் மற்றும் பெரம்பலூரில் நடைபெற்ற அரசு விழாக்களில் முதல்வர் பங்கேற்றார்.

 

அப்போது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முண்டி பட்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித ஆளை புதிய அழகினை அவர் திறந்து வைப்பதாக இருந்தது. மேலும் முக்கம்பு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய தடுப்பணையை திறந்து வைப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

 

மேலும் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய தடுப்பணையை திறந்து வைப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் அந்த தினம் காலை 9:30 மணி அளவில் திருச்சி காட்டூர் பாப்பா குறிச்சியில் பள்ளி மாணவர்களின் அறிவியல் அறிவை மேம்படுத்தும் வானவில் மன்றத்தை தொடங்கி வைத்துவிட்டு அரியலூர் புறப்பட்டு சென்றார்.

 

 

இந்த நிலையில் இம்மாத இறுதியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருச்சி வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் மேற்கண்ட காகித ஆலை புதிய அழகு மற்றும் முக்கொம்பு தடுப்பணை ஆகியவற்றை திறந்து வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த விழா வருகிற 28ஆம் தேதி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில்நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இந்த மாத இறுதியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருவது உறுதி என ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

 

முதலமைச்சர் வருகையை உறுதி செய்யும் வகையில் இன்று திமுக முதன்மைச் செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கினை பார்வையிட்டு ஆய்வு செய்தார் ஆய்வின்போது கலெக்டர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்கும் இந்த விழாவில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்பு திட்டங்கள் செய்லாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

 

அமைச்சரான பிறகு முதன் முறையாக திருச்சியில் நடைபெறும் அரசு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பதால் விளையாட்டு துறையை சார்ந்த முதல்வர் சுழல் கோப்பை காண போட்டிகளும் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திருச்சி வருகையை ஒட்டி திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )