500 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்
கோவில்பட்டி அருகே குருமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் 500 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது. சேதமான மக்காச்சோள பயிர்களை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குருமலை பஞ்சாயத்து பகுதியில் 500 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிரிட்டு வருகின்றனர். மக்காச்சோளம் பயிர்களை இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
சேதமான மக்காச்சோள பயிர்களை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று சேதமடை ந்த பயிர் பாதிப்புகளை பார்வையிட்டு அப்பொழுது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை ஆய்வு செய்து பயிருக்கான இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்.
மக்காச்சோள பயிரை பாதுகாப்பதற்காக இரவு நேரங்களில் விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர், இதனால் விவசாயிகளுக்கு உயிருக்கு ஆபத்தான நிலை உள்ளது, என்று பேசினார். பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
இதில் தமிழக அனைத்து விவசாய சங்க மாவட்ட செயலாளர் அருமைராஜ், கோபால்சாமி, கோபாலகிருஷ்ணன், அலங்கார முத்து, நவநீதகிருஷ்ணன், அய்யலுசாமி, சங்கிலி பாண்டி,கோபி, முருகன், உள்ளிட்ட விவசாயிகள் உடன் இருந்தனர்.