BREAKING NEWS

குத்தாலம் தேர்வு நிலை பேரூராட்சியில் ரூபாய்1கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

குத்தாலம் தேர்வு நிலை பேரூராட்சியில் ரூபாய்1கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் பன் மடங்கு பெருகிவிட்ட மக்கள் தொகைக்கு ஏற்ப மயான பயன்பாட்டிற்கு போதிய இடம் இல்லாமல் பிரேதங்களை எரியுட்டுவதிலும் அடக்கம்செய்வதிலும் பெரும் சிரமம் இருந்து வந்தது இந்நிலையில்,..

 

குத்தாலம் பேரூராட்சி மயானத்திற்கு அருகில் கடலங்குடி ஊராட்சி எல்லைக்குட்பட்ட 15 ஏர்ஸ் நிலத்தினை பேரூராட்சி நிர்வாகத்தின் வசம் வகை மாற்றம் பெற்று அதில் தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பு நிதியில் ரூபாய் 1.42 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட உள்ளது பெரும் முயற்சி செய்து நிலத்தினை பேரூராட்சி வசம் பெற்றுத்தந்த திமுக மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் அன்பழகன்,

 

 

பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன்.கடலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் அறிவுச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி உறுப்பினர்கள் காயத்ரி குமார்,

 

ராஜஸ்ரீ தினேஷ்.சாந்தி சங்கர்.முத்துலட்சுமி விஜி.ஞானசம்பந்தம்.சுகன்யா சுரேஷ். மாலதி கலியபெருமாள்.சேகர்.ராதிகா சசிகுமார்.மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பேரூராட்சியின் மூலம் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டது தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் அவர்கள் தெரிவித்தார்.

 

CATEGORIES
TAGS