BREAKING NEWS

விவசாயிகள் டிராக்டருடன் சாலை மறியல் தஞ்சை – அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விவசாயிகள் டிராக்டருடன் சாலை மறியல் தஞ்சை – அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

குருங்குளம் சக்கரை ஆலை மற்றும் ஆலைஅதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் டிராக்டருடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தஞ்சை – அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த செம்மங்குடி, அணைக்குடி, தேவன் குடி, வீரமாங்குடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 700 ஏக்க பரப்பளவில் கரும்பு சாகுபடி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் கரும்புகளை அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலத்தில் இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

 

 

இந்நிலையில் குருங்குளம் சர்க்கரை ஆலை நிர்வாகம், ஆலை அதிகாரகாரிகளும் இப்பகுதியில் வெட்டக்கூடிய கரும்புகளை தஞ்சை மாவட்டத்தில் இயங்கி வரும் குருங்குளம் சர்க்கரை ஆலைக்கு தான் விற்பனைக்கு கொண்டு வர வேண்டும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் ஆலைக்கு விற்கக் கூடாது என வந்து மிரட்டுவதாகவும், ஆலைக்கு அனுப்ப வேண்டிய கரும்புகளை தடுத்து நிறுத்துவதாகவும் குற்றம் சாற்றுகின்றனர்.

 

 

குருங்குளம் ஆலை நிர்வாகத்தை கண்டித்து விளாங்குடியில் தஞ்சை – அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் 45 நிமிடங்களாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில் இப்பகுதியில் இருந்து அறிஞர் அண்ணா சக்கரை ஆலை சுமார் 35 கிலோமீட்டர் தூரம் உள்ளது.

 

மேலும் வெட்டப்படும் கரும்புகளை ஆலை நிர்வாகம் 2 – 3 நாட்கள் காக்க வைப்பதாகவும், இதனால் பிழிதிறன் இழப்பு ஏற்படுவதாகவும், வெட்டிய கரும்புக்கு, உரிய பணமும் கொடுக்க காலதாமதம் செய்கின்றனர். ஆனால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை இப்பகுதியில் இருந்து வெறும் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

 

 

உடனடியாக பணம் கிடைத்து விடுகிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி தான் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை விற்பனை செய்கிறோம். ஆனால் சர்க்கரை ஆலையில் உள்ள அதிகாரிகள் தங்களை வந்து தனியார் ஆலைக்கு விற்கக் கூடாது என மிரட்டுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

 

சாலை மறியல் போராட்டத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தது பேரில் சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

 

CATEGORIES
TAGS