திருச்சியில் திமுக மத்திய மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்: அமைச்சர் நேரு பங்கேற்பு.

திமுக திருச்சி மத்திய மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு அவைத் தலைவர் தர்மலிங்கம் தலைமை வகித்தார்.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த செல்வீரர்கள் கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும்,
திருச்சி மாவட்டத்தின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தமிழ்நாடு காகித ஆலை 2வது கிளை துவக்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 29ஆம் தேதி திருச்சிக்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு திருச்சி விமான நிலையம் முதல் மணப்பாறை வரை உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் டாக்டர் தமிழரசி, மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.