உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப் பட்டி ஆல் கொண்டமால் கோவில் திருவிழா ஏலம்..

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப் பட்டி ஆல் கொண்டமால் கோவில் திருவிழா ஆண்டுதோறும் தை திருநாள் அன்று கொண்டாடப்படுவது வழக்கம்.
தமிழர் திருநாள் நடைபெறும் திருவிழாவின் போது சுற்றுவட்டாரப்பகுதி பொதுமக்கள் தங்கள் நேர்த்திக்கடனை கோவிலுக்கு செலுத்தி சாமி தரிசனம் செய்து விட்டு வருவார்கள்.

அதில் விவாசயிகள் வேண்டிக்கொண்டபடி மாடுகளை ஆல் கொண்டமால் கோவிலின் கோசாலையில் விட்டு செல்வார்கள் இதேபோல் உடல்நலம் சரியில்லாதவர்கள் மண் உருவபொம்மைகள் வாங்கி வைத்துசாமி தரிசனம் செய்வார்கள்.
இதற்கு கோவில் நிர்வாகம் தனிதனியாக ஏலம் வீட்டு திருவிழா நடத்துவார்கள் இந்த விடப்பட்ட ஏலத்தில் ரூ 9 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஏலம்விடப்பட்டது.

ஏலம்விட பட்டபோது கோவில் உதவி ஆணையர்.செந்தில்குமார். செயல் அலுவலர் ராமசாமி ஆய்வாளர் சரவணக்குமார், எழுத்தர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றியம் தலைவர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்
