BREAKING NEWS

பழனி திருக்கோயில் கும்பாபிஷேகத் தேதியை மாற்ற வேண்டும் இந்து தமிழர் கட்சி மாநில தலைவர் இராம.ரவிக்குமார் பேட்டி..

பழனி திருக்கோயில் கும்பாபிஷேகத் தேதியை மாற்ற வேண்டும் இந்து தமிழர் கட்சி மாநில தலைவர் இராம.ரவிக்குமார் பேட்டி..

திண்டுக்கல் மாவட்டம்,

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி கும்பாபிஷேக நடைபெறும் என்று அறங்காவலர் குழுவினர் அறிவித்தனர்.

 

ஆனால் ஆகம விதிப்படி இந்த மாதத்தில் ,இந்த தேதியில் முகூர்த்தக்கால் நடுவதோ, கும்பாபிஷேகம் நடத்துவதோ தவறு என்றும் தொடர்ந்து கும்பாபிஷேக தேதியை மாற்றம் செய்ய வேண்டும் கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற வேண்டும்.

 

 

மேலும் கும்பாபிஷேகம் நடைபெறும் பொழுது கலசத்திற்கு தீர்த்தம் ஊற்றுதலில் மிராசு பண்டாரங்கள், சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் ஆகியோரை அனுமதிக்க வேண்டும். பொது மக்களுக்கு குடமுழக்கில் அனுமதி அளிக்க வேண்டும். கணக்கு வழக்குகளை வெளிப்படைத்தன்மையுடன் தெரிவிக்க வேண்டும். வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

 

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்து தமிழர் கட்சியின் மாநில தலைவர் இராம. ரவிக்குமார், மாநில செயலாளர் மனோஜ் குமார் ஆகியோர் தலைமையில் திருக்கோயில் மேலாளர் முத்துராமலிங்கத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

 

CATEGORIES
TAGS