BREAKING NEWS

சுருளி அருவியில் நேற்று பெய்த மழையினால் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.

சுருளி அருவியில் நேற்று பெய்த மழையினால் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.

 

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி தேனி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.

 

 

சுருளி அருவிக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காகவும், இல்லங்கள் மற்றும் கோவில்களுக்கு தேவையான புனித நீர் எடுப்பதற்காகவும், மற்றும் சுருளி அருவியில் குளிப்பதற்காகவும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

 

 

சுருளி அருவியின் நீர்வரத்து பகுதிகளில் நேற்று பெய்த மழையினால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சுருளி அருவியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.

CATEGORIES
TAGS