BREAKING NEWS

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா.

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா.

 செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

 

தென்காசியில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா – 7 பயனாளிகளுக்கு ரூ.7 மதிப்பிலான பேட்டரி சக்கர வண்டிகள் ஆட்சியர் வழங்கினார்.

 

நாடு முழுவதும் இன்று மாற்றுத்திறனாளிகள் தினவிழா கொண்டாடப் பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா இன்று கொண்டாடப்பட்டது.

 

 

விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை வகித்தார்.
விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் பேசும்போது:-

தென்காசி மாவட்டத்தில் இன்றைய தினம் அனைத்து நாடுகள் மாற்றுத்
திறனாளிகள் தின விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக. 

 

 

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் 7 முதுகு தண்டுவடம் மற்றும் தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான மின்கலம் பொருந்திய சக்கர நாற்காலிகளும், சிறப்பு பள்ளிகளில் கல்வி போதிக்கும் சிறப்பு ஆசிரியர்கள்.

 

தசை பயிற்சியாளர்களுக்கு மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக. சிறப்பாக நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் பேசினார். பின்னர் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியுடன் கூடிய சக்கர நாற்காலி வண்டிகளை வழங்கியதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்றுனர்.

 

 

ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கினார் விழாவில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறை அலுவலர் ஜெயப்பிரகாஷ், உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS