உடுமலை 400 ஆண்டு பழமை வாய்ந்த நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில் ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.
திருப்பூர் மாவட்டம் உடுமலை, நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெற்றது.
உடுமலை, பெரியகடை வீதியிலுள்ள நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, கடந்த, 7ம் தேதி துவங்கியது. பகல் பத்து உற்சவம், 2 ம் தேதி, சொர்க்கவாசல் திறப்பு,
அதனை தொடர்ந்து, ராப்பத்து உற்சவம், திருவாய் மொழி திருநாள் நடந்து வந்தது. தினமும் சுவாமிகளுக்கு திருமஞ்சனம், பல்வேறு அலங்காரங்களில், பூமி நீளாநாயகி சமேத சீனிவாசப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இவ்விழாவில், இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப்பின்பற்றி நீண்ட
வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்உடுமலைப்பேட்டைசொர்க்கவாசல் திறப்புதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பூர்திருப்பூர் மாவட்டம்நவநீத கிருஷ்ண சுவாமி கோவில்வைகுண்ட ஏகாதசி விழா