தியாகி விஸ்வநாத தாஸ் காலனியில் மாற்று இடம் வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்.
![தியாகி விஸ்வநாத தாஸ் காலனியில் மாற்று இடம் வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம். தியாகி விஸ்வநாத தாஸ் காலனியில் மாற்று இடம் வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்.](https://aramseithigal.com/wp-content/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-02-at-4.33.27-PM-1.jpeg)
தேனி ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பொம்மையா கவுண்டன் பட்டியில் மருத்துவர் தெருவை சேர்ந்த நடராஜன் மனைவி மஞ்சம்மாள் என்பவர் தியாகி விசுவநாத தாஸ் காலனியில் மாற்று இடம் வழங்க கோரி பாதிக்கப்பட்டவர் களுடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
அப்போது, மஞ்சம்மாள், கணவர் நடராஜன் முடி திருத்தும் தொழில் செய்து வந்த நிலையில் சர்க்கரை நோயால் கடந்த 2019 ஆம் ஆண்டு இயற்கை மரணம் அடைந்தார்.
இவருக்கு தமிழக அரசு கடந்த 1993 ஆம் ஆண்டு தேனி – தியாகி விஸ்வநாததாஸ் காலனியில் 198 எண் கொண்ட பிளாட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் கல் கட்டிடம் கட்டி குடிசை அமைத்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு தேனி அல்லிநகரம் நகராட்சி எவ்வித முன் அறிவிப்பின்றி இடத்தை ஆக்கிரமித்து பொது கழிப்பிடம் கட்டினர்.
இதற்கு மாற்று இடமாக தேனி விசுவநாத தாஸ் காலனியில் இடமிருந்தும் அதனை கொடுக்காமல் அல்லிநகரம் வீரப்பயனார் கோவிலில் காட்டுப் பகுதியில் கொடுத்ததை மாற்றி தியாகி விசுவநாததாஸ் காலி இடத்தில் இடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட மனுவினை தேனி ஆட்சியர் முரளிதரன் அவர்களை நேரில் சந்தித்து பாதிக்கப்பட்டவர்கள் வழங்கினார்கள்.