BREAKING NEWS

செபஸ்தியார் ஆலயத்தை ரயில்வே துறையினர் இடிக்க வருவதாக அறிவிப்பு – கிறிஸ்தவர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

செபஸ்தியார் ஆலயத்தை ரயில்வே துறையினர் இடிக்க வருவதாக அறிவிப்பு – கிறிஸ்தவர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானம் அருகே அமைந்துள்ள செபஸ்தியார் ஆலயத்தை ரயில்வே துறையினர் இடிக்க வருவதாக அறிவிப்பு – கிறிஸ்தவர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

திருச்சி மாநகராட்சி 48வது வார்டில் ஜி கார்னர் மைதானம் அருகே அமைந்துள்ளது புனித செபஸ்தியார் கோயில். இக்கோயிலில் பல ஆண்டுகளாக சுப்பிரமணியபுரத்தில் உள்ள கிறிஸ்தவ மக்கள் தினமும் வழிபாடு செய்து வருகின்றனர்.

 

 

பல ஆண்டுகளாக உள்ள செபஸ்தியார் ஆலயத்தை ரயில்வேக்கு சொந்தமான ஜி.கார்னர் மைதானத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி ரயில்வே துறையினர் ஆக்கிரமிப்புகளை இன்று காலை அகற்ற வருவதாக கூறியிருந்தனர்.

 

இதனை அடுத்து இன்று ஜான் பிரிட்டோ ஆலய பங்குத்தந்தை தலைமையில் கிறிஸ்தவர்கள் புனித செபஸ்தியார் ஆலயம் அருகே ஒன்று திரண்டனர்.

 

 

தகவல் அறிந்த 48 வது வார்டு கவுன்சிலர் தர்மராஜ் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு கூடி இருந்த கிறிஸ்தவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

ஆனால் ஆக்கிரமிப்பு அகற்ற வருவதாக கூறிய ரயில்வே துறையினர் வரவில்லை. பின்னர் அங்கு கூடியிருந்த கிறிஸ்தவர்கள் ஜெபம் செய்துவிட்டு  கலைந்து சென்றனர்.  இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

CATEGORIES
TAGS