கிழபெரும்பள்ளம் ஊராட்சியில் திமுகவினர் முப்பெரும்விழா நிகழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிழபெரும்பள்ளம் ஊராட்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல், இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள், கீழப்பெரும்பள்ளம் ஊராட்சியை சார்ந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைதல் என முப்பெரும் விழா மாவட்ட துணைச் செயலாளர் மு.ஞானவேலன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமை தாங்கினார். செம்பை ஒன்றிய செயலர்கள் பி.எம்.அன்பழகன், எம்.அப்துல்மாலிக், மேளையூர்முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்து.தேவேந்திரன், தஞ்சை மண்டல தொழிலநுட்ப அணி பொருப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், ஜி.என்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் நலத் திட்டம்:
80 வயதுகடந்த மூத்த முன்னோடி 25 நபர்களுக்கு மாவட்ட செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செய்து பொற்கிழி வழங்கினார். தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கினார்.

மாற்று கட்சியில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர்கள் மாவட்ட துணை செயலாளர் மு. ஞானவேலன் தலைமையில், மாவட்ட செயலாளர் நிவேதா எம்.முருகன் எம் எல் ஏ முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். ஊராட்சிமன்ற தலைவர் ஆரோக்கியசாமி நன்றி தெரிவித்தார்.
