தஞ்சாவூர் இருப்புப்பாதை காவலர்கள் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் விழா.

தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே உள்ள இருப்புப் பாதை காவல் நிலைய காவலர்களின் குடியிருப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நான்காம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவிற்கு இருப்புப் பாதை காவல் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர்கள் வி .எஸ். சிவ வடிவேல் எம் .சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கு வந்த அனைவரையும் காவல் உதவி ஆய்வாளர் s.செந்தில்வேலன் வரவேற்றார் சமத்துவ பொங்கல் விழாவில் காவலர்கள் அனைவரும் குடும்பத்தினரோடு பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கி கொண்டாடினர்.
பொங்கல் விழாவை முன்னிட்டு கோலப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமிகளுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகரன் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS காவலர்களின் குடியிருப்புசமத்துவ பொங்கல் விழாதஞ்சாவூர் மாவட்டம்தஞ்சாவூர் ரயில் நிலையம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பொங்கல் திருநாள் விழா