தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை எம் எல் ஏ ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான பொங்கல் தொகுப்பை அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இந்த வருடம் தமிழக அரசு அறிவித்துள்ள ரொக்கப் பணம் ஆயிரம் ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை, மற்றும் ஒரு செங்கரும்பு ஆகிய பொங்கல் சிறப்பு தொகுப்பிணை நியாயவிலை கடைகளில் டோக்கன் பெற்று பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் கம்பம் பகுதியில் கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் பொங்கல் தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சியை மந்தையம்மன் கோவில் நியாய விலை கடை மற்றும் கம்பம் மெட்டு சாலையில் உள்ள கூட்டுறவு சொசைட்டியில் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கம்பம் பகுதியில் உள்ள பல்வேறு நியாயவிலை கடைகளுக்கு சென்று திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கம்பம் பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் ஏராளமான மக்கள் பொங்கலுக்கு தமிழக அரசு வழங்கும் ரொக்க பணம் மற்றும் தொகுப்பினை பெற்றுச் சென்றனர்.