காஞ்சி மண்டலத்தில் உள்ள 283 திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், திருக்கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சியினை காஞ்சிபுரம் மேயர் மாகலட்சுமியுவராஜ், இணை ஆணையர் வான்மதி ஆகியோர் வழங்கி துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கடந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர், பட்டர், திருக்கோயில் அலுவலக பணியாளர்கள் , தூய்மை பணியாளர்களுக்கு புத்தாண்டை ஒட்டி சீருடை வழங்கபடுமென அறிவித்து கடந்தாண்டு செயல்படுத்தியது.
அவ்வகையில், நேற்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் திருக்கோயிலில் பணியாற்றுபவருக்கு கருணைத் தொகையாக ரூபாய் 3000 இந்த ஆண்டு வழங்கப்படும் என அறிவித்து இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை மண்டலத்திற்கு உட்பட்ட சுமார் 783 திருக்கோயில்களில் பணிபுரியும் 2000க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் , பட்டர் , திருக்கோயில் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் திருக்கோயில் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் இந்து சமய அறநிலைத்துறை மண்டல இணை ஆணையர் வான்மதி தலைமையில் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் நகரில் உள்ள திருக்கோயில்களில் பணி புரியும் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், இணை ஆணையர் வான்மதி ஆகியோர் புத்தாடைகள் மற்றும் சீருடைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர் செல்வி , செயல் அலுவலர்கள் தியாகராஜன், வேதமூர்த்தி , வேலரசு , பூவழகி, நடராஜ் உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு , ஸ்ரீபெரும்புதூர் , உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதியிலுள்ள திருக்கோயில் பணியாளர்களுக்கும் புத்தாண்டு மற்றும் சீருடைகள் வழங்கப்பட உள்ளது.
இதில் பேசிய காமேஸ்வர குருக்கள் , கொரோனா காலகட்டத்தில் திருக்கோயில்கள் மூடப்பட்ட நிலையில் அதில் பணிபுரியும் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கி உயிரோட்டம் அளித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் , தற்போது ஆண்டுதோறும் புத்தாண்டுகள் சீருடைகள் வழங்கி திருக்கோயில்களில் பல்வேறு நல திட்டங்களை இந்து சமய அறநிலைத்துறை மூலம் செயல்படுத்தி முன் உதாரணமாக செயல்பட்டு வரும் அவருக்கு அர்ச்கர்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
கிட்டு பட்டர் கூறுகையில் , இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில் ஊழியர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது வரவேற்பை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள அனைத்து கோயில் அர்ச்சகர்களும் , ஊழியர்களும் கலந்து கொண்டனர்.