சோழமண்டலம் நிறுவனம் சார்பாக விவசாயிகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டது.
செய்தியாளர் தாரிக்கனி.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பழையகூடலூர் கிராமத்தில் துவக்கப்பட்டுள்ள சோழமண்டலம் கூட்டுப் பண்ணையம் உற்பத்தியாளர் நிறுவனமும் ஐசிஐசிஐ பவுண்டேஷனும் சேர்ந்து பாடகச்சேரி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் சாகுபடி மற்றும் இயற்கை விவசாயம் குறித்து மூன்று நாள் களப்பயிற்சி வழங்கப்பட்டது.
அப்போது பயிற்சி பெற்ற விவசாயிகளுக்கு கால்நடை தீவனம் வளர்க்க தேவையான அசோலா பெட்.மண்புழு உரம் தயாரிக்க தேவையான வெர்மி பெட்.வரப்பு உளுந்து விதை. தீவனப்புல் விதை மற்றும் வயலில் நீர்மறைய நீர்பாச்சுதலுக்கான கருவி வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில் பாடகச்சேரி பகுதியிலுள்ள விவசாயிகள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டு பயன்பெற்றனர் இந்நிகழ்வின் போது சோழமண்டலம் கூட்டுப்பண்ணையம் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பெருந்தலைவர் இராஜேந்திரன்.துணை பெருந்தலைவர் கஜேந்திரன்.
இயக்குனர் மரிஅந்துவான். முதன்மை செயல் அலுவலர் ஹரிஷ். ஐசிஐசிஐ பவுண்டேஷன் களப்பணியாளர் சிவானந்தம்.கணேஷ்.பயிற்சியாளர் ராஜேஷ்.பாடகச்சேரி குழு கௌரவ தலைவர் தர்மலிங்கம்.தலைவர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.