BREAKING NEWS

சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெருவில், விவசாய நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து விற்கும் நபர்கள் மாதா கோவில் இடித்ததற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெருவில், விவசாய நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து விற்கும் நபர்கள் மாதா கோவில் இடித்ததற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

திருச்சி திருவெறும்பூர், சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெரு பகுதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக 10 அடி நீளம் மற்றும் 8 அடி அகலத்தில் மாதா கோவில் உள்ளது.  இந்த மாதா கோவில் அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ குடும்பத்தினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 

 

இந்நிலையில் அந்தப் பகுதியில் விவசாய நிலத்தை தனிநபர் ஒருவர் ரியல் எஸ்டேட் அமைத்துள்ளார். அவருக்கு ஆதரவாக அந்தப் பாதையில் உள்ள மாதா கெபியை பஞ்சாயத்து தலைவி ரேணுகா தேவியின் கணவர் பார்த்தசாரதி ஆக்கிரமிப்பு எனக் கூறி பொக்லின் இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்,

 

இடித்த மாதா கேபியை மீண்டும் கட்டித்தரக்கோரியும் தொடர்ந்து கிறிஸ்தவர்களுக்கு பல்வேறு வகையில் தொந்தரவு அளித்து வரும் பஞ்சாயத்து தலைவி ரேணுகா தேவியின் கணவர் பார்த்தசாரதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் புகார் மனு அளித்தனர்.

 

 

இந்நிலையில் இன்று கட்டுமான பணிக்காக வந்த பிளாட் உரிமையாளர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும் திமுக பிரமுகருமான பார்த்தசாரதி ஆகியோரை 200க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமுக தீர்ப்பு காணப்படும் இன்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

CATEGORIES
TAGS