BREAKING NEWS

ஒடுகத்தூர் அடுத்த தென்புதுப்பட்டு கிராமத்தில் விவேகானந்தர் 160 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம். தமிழை வளர்த்தது பாஜக மாநில துணைச் செயலாளர் ஆவேச பேச்சு.

ஒடுகத்தூர் அடுத்த தென்புதுப்பட்டு கிராமத்தில் விவேகானந்தர் 160 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம். தமிழை வளர்த்தது பாஜக மாநில துணைச் செயலாளர் ஆவேச பேச்சு.

 

அணைக்கட்டு, 

விவேகானந்தர் 160 வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கியும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும் கொண்டாடினர்.

 

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த தென்புதுப்பட்டு பகுதியில் அணைக்கட்டு தெற்கு ஒன்றிய பாஜகவினர் சார்பில் விவேகானந்தர் 160 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் அணைக்கட்டு தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டபிரபு தலைமை தாங்கினார்.

 

 

மாவட்டத் தலைவர் வாசுதேவன் மற்றும் மாவட்ட செயலாளர் தண்டபாணி எஸ் எஸ் டி பிரிவு தலைவர் பிரசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர் அணைக்கட்டு தெற்கு ஒன்றிய தலைவர் சுந்தரமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாநில துணைச் செயலாளர் வெங்கடேசன் கலந்து கொண்டார்.

 

முதலில் பாக்கம் பகுதியில் இருந்து தென் புதுப்பட்டு வரை இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது தொடர்ந்து தென் புதுப்பட்டு அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் பென்சில் பேனா உள்ளிட்டவற்றை வழங்கினர்.

 

மேலும் அதே பகுதியில் பாஜக கொடியேற்று நிகழ்ச்சியும் நடைபெற்றது இதனையடுத்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மாநில துணைச் செயலாளர் வெங்கடேசன் திமுகவினர் இன்ப நிதியை முதல்வராக அமைச்சராக துடித்து வருகின்றனர்.

 

 

அம்பானிக்கு காண்ட்ராக்ட் கொடுப்பது எல்லாம் திமுகவினர் தான் என குற்றம் சாட்டி பேசிய அவர் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அவரது மனைவி என அனைவரும் ஒரு சிப்பந்தி வேலைக்கு பல லட்சங்கள் பெற்றுள்ளனர் என பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார் தொடர்ந்து ரோடு போட்டாலும் போடாவிட்டாலும் 30 சதவீத கமிஷன் பணத்தை கேட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.

 

 

நரேந்திர மோடி உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என சொல்லி தமிழை வளர்த்து வருகிறார் தமிழை வளர்ப்பது பாஜக தான் என ஆவேசத்துடன் பேசியனார் நகைகடன் கல்வி கடன் தள்ளுபடி செய்கிறேன் என வாக்குறுதி அளித்துவிட்டு,..

 

 

மக்களை ஏமாற்றியது திமுக மேலும் மின் கட்டணங்கள் மாதம் ஒருமுறை கணக்கெடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு மின் கட்டணத்தை உயர்த்தியது திமுக என குற்றம் சாட்டினார்.  இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் அணைக்கட்டு தெற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் தென்புதுபட்டு கிராம பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருந்தனர்.

CATEGORIES
TAGS