BREAKING NEWS

தூய தெரசா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

தூய தெரசா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

செய்தியாளர் க.கார்முகிலன்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தூய தெரசா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் முனைவர் வீ.காமராசன் தலைமை வகித்தார்.

 

 

கல்லூரியின் செயலர் அருட்சகோதரி கருணா ஜோசப் பாத் மற்றும் கல்லூரி நிர்வாகி வின்சென்ட் அமலா ஆகியோ முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

 

இறுதியாக மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேராசிரியர்கள் பொங்கல் வைத்தும் பின்னர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கி மகிழ்ச்சி பொங்க தை திருநாளான பொங்கல் பண்டிகையை உற்சாகம் பொங்க கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

CATEGORIES
TAGS