ஆமை வேகத்தில் செயல்படும் களக்காடு நகராட்சியை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடத்துவது என எஸ்டிபிஐ கட்சி கூட்டத்தில் தீர்மானம்..

நெல்லை மாவட்டம் களக்காடு நகர எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் இன்று காலை 7.00 மணிக்கு நகர அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
இதில் நகர செயலாளர் காஜா முகைதீன் வரவேற்புரையாற்றினார்.நகர செயற்குழு உறுப்பினர்கள் ஆரிப் பைஜி,முகம்மது அலி,
கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கிழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 20 வது வார்டிக்கு உட்பட்ட பழைய மணி கூண்டு முதல் வியாசராஜபுரம் முஸ்லிம் கிழக்கு தெரு ரோடு பழுதடைந்து உள்ளதை பற்றி நகராட்சியின் கவனத்திற்கு கொண்டு செல்வதோடு,.
போர்க்கால அடிப்படையில் பேவர் பிளாக் கல் பதித்து தரவேண்டும் என நகாரட்சிக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது. நகராட்சி உயர்வை பெற்றதில் இருந்து பொதுமக்களுக்கு தேவையான விசியங்களை கேட்டல் ஊழியர்கள் பற்றாக்குறை என்று அலட்சியமான பதில்கள் வந்தவண்ணமாக உள்ளது.
அதே சமயத்தில் வரி வசூல் மட்டும் நடக்கிறது. புதிய பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு சம்மந்தமாக அதிகாரிகள் காலதாமதபடுத்துவதும். நகராட்சிக்கு தேவையான ஊழியர்கள் இல்லை என்று சொல்வதை கண்டித்து நகராட்சி ஆமை வேகத்தில் செயல்படுவதாக கருதி. நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சுவரொட்டி, மற்றும் கண்டன ஆர்பாட்டம் நடத்துவது என தீர்மானிககப்பட்டது. இறுதியாக நகர செயற்குழு உறுப்பினர் ரபிக் நன்றியுரையாற்றினார்.