குடிநீர்மேல் தேக்க தொட்டியில் நடந்த இழிவான செயலை கண்டித்து கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர்மேல் தேக்க தொட்டியில் நடந்த இழிவான செயலை கண்டித்து அச்செயலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தி,..
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் தொகுதி செயலாளர் செல்லபாண்டியன், மாநில செயலாளர் வேலூர் திலிப், மாவட்டத் துணைச் செயலாளர் இளங்கோ, மாவட்டச் செய்தி தொடர்பாளர் நாகராஜன், பொருளாளர் சஜின் குமார்,மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES வேலூர்