BREAKING NEWS

பெரியகுளம் தாமரைக்குளம் கண்மாய் மீன் பிடி குத்தகை ஏலம் 12 லட்சம்.

பெரியகுளம் தாமரைக்குளம் கண்மாய் மீன் பிடி குத்தகை ஏலம் 12 லட்சம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் பெரியகுளம் வட்டத்தைச் சேர்ந்த தாமரைக் குளம் கண்மாய் மீன் பிடி குத்தகை ஏலம் நடைபெற்றது.

 

கடந்த ஆண்டு விடப்பட்ட குத்தகை ஏலத்தின் அடிப்படையில் ரூபாய் 5 லட்சத்து 12 ஆயிரத்து 500 க்கு வங்கி வரைவோலை செலுத்தி ஏலத்தில் 45 நபர்கள் பங்கு கொண்டனர்.

 

மீன்வளத்துறை துணை இயக்குனர் பஞ்சராஜா தலைமையில், பெரியகுளம் தாசில்தார் காதர் ஷெரீப் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. அரசு நிர்ணய தொகையாக 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

 

 

இந்த நிலையில் டெண்டர் பிரிக்கப்பட்ட சூழ்நிலையில் ரூபாய் 12 லட்சத்திற்கு ஏலம் கேட்கப்பட்டிருந்தது .இதனை தொடர்ந்து நடந்த பகிரங்க ஏலத்தில் பழனி முருகன் என்பவர் கூடுதலாக 12 லட்சத்தி 2 ஆயிரம் ரூபாய் கேட்டார்.

 

இதனையடுத்து அவருக்கு குத்தகை விடப்பட்டது .பரபரப்பாக நடந்த இந்த ஏலத்தில் சுமுகமாக ஏல நடவடிக்கைகள் முடிவடைந்தது. ஏலத்தின் போது எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க இன்ஸ்பெக்டர் சரவணன், வனிதா தேவி, ஆண்டிபட்டி சப் இன்ஸ்பெக்டர் சுல்தான் பாட்ஷா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

CATEGORIES
TAGS