பவானி வரதநல்லூர் கிராமத்தில் குடியரசு தின கிராமசபை கூட்டம்.
ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள வரதநல்லூர் கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையிலும், பவானி தாசில்தார் ரவிச்சந்திரன்,
பவானி யூனியன் ஆணையாளர்களான கோபாலகிருஷ்ணன், மாரிமுத்து, வரத நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி சிவபெருமாள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் வரதநல்லூர் ஊராட்சி வரவு செலவு கணக்குகள் பொதுமக்களிடையே படித்து காண்பிக்கப்பட்டது.
பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, பாகப்பிரிவினை உட்பட 8 மனுக்கள் கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் தங்களின் மனுக்கள் மீது துறை சார்ந்த அதிகாரிகள் மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி திட்ட இயக்குனர் ஸ்ரீனிவாசன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் சூர்யா, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கார் ஜோன் சதீஷ்குமார் மற்றும் மருத்துவத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, குடிநீர் வடிகால் வாரியத் துறை, கால்நடை துறை போன்ற துறை சார்ந்த அதிகாரிகள் அலுவலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் வரதநல்லூர் ஊராட்சி செயலாளர் அம்பிகா வடிவேல் நன்றி கூறினார்.