TBML கல்லூரியில் 74 ஆம் ஆண்டு குடியரசு தின விழா.
![TBML கல்லூரியில் 74 ஆம் ஆண்டு குடியரசு தின விழா. TBML கல்லூரியில் 74 ஆம் ஆண்டு குடியரசு தின விழா.](https://aramseithigal.com/wp-content/uploads/2023/01/IMG-20230126-WA0353.jpg)
செய்தியாளர் க. கார்முகிலன்.
மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் TBML கல்லூரியில் 74வது குடியரசு தின விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் Dr. ஜீன் ஜார்ஜ், அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
பின் பேராசிரியர்.S/Lt.Dr.G. தாமஸ் நித்தியானந்தம்,தேசய மாணவர் படை அலுவலர் அவர்கள், அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார்கள்.
பேராசிரியர். P.C.ஜோப் பிரபாகர், இயற்பியல் துறை தலைவர், அவர்கள் குடியரசு தினத்தை குறித்தும் அதன் வரலாற்றை குறித்தும் மற்றும் அவைகளால் ஏற்படுகின்ற நன்மைகள் தீமைகள் அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் மிகச் சிறப்பாக சிறப்புரையாற்றினார் கள்.
தேசிய மாணவர் படையினர் பல்வேறு பட்ட பயிற்சி பட்டறைகளுக்கு சென்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியின் இறுதியாக பேராசிரியர்.S/Lt.Dr.P. கோபிநாதன், தேசிய மாணவர் படை அலுவலர் மற்றும் தாவரவியல் துறை தலைவர் அவர்கள், நன்றியுரை நல்கினார்கள்.
இந்த 74 ஆவது குடியரசு தின விழாவில் முன்னாள் பேராசிரியர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.