அந்தியூரில் வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி தொழிலாளியிடம் பணம் வாங்கி ஏமாற்றிய வாலிபர் கைது.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த அப்பு என்கிற ஆறுமுகம் உனது வீடு பழுது அடைந்துள்ளது அதனை சரி செய்ய வங்கியில் கடன் வாங்கி தருகிறேன் எனக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அப்பு என்கிற ஆறுமுகம் தனது நண்பர் எனக்கூறி ஒலகடம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
சீனிவாசன் வங்கியில் கடன் பெற்று தரும் ஏஜெண்டாக பணிபுரிந்து வருவதாக அறிமுகம் செய்து வைத்தார். மேலும் வங்கியில் கடன் பெற தனக்கு 31 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என சீனிவாசன் கூறியதை தொடர்ந்து முருகன் சீனிவாசன் இடம் 31,000 கொடுத்துள்ளார்.
தொடர்ந்து லோன் தனக்கு பெற்று தரும்படி சீனிவாசன் இடம் முருகன் வலியுறுத்தி வந்துள்ளார் காலதாமதம் செய்து வந்ததைத் தொடர்ந்து சீனிவாசன் மற்றும் ஆறுமுகம் மீது முருகன் அந்தியூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி ஆறுமுகத்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தார்.
மேலும் தலைமறைவாய் இருந்து வந்த சீனிவாசனை இன்று கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.