அந்தியூரில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் மாவீரன் குருவின் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் காந்தி மைதானத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் முன்னாள் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் மாவீரன் காடுவெட்டி ஜெ.குருவின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு அந்தியூர் நகர வன்னியர் சங்க செயலாளர் சேகர் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் எஸ் சி ஆர் கோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த மாவீரன் ஜெ.குருவின் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் மலைச்சாமி பர்கூர் ஒன்றிய செயலாளர் நடராஜ் வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கராசு அந்தியூர் நகரத் தலைவர் மோகன பாலச்சந்திரன் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் இளைஞர் அணி செயலாளர் பரமேஸ்வரன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணி பிரமுகர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.