BREAKING NEWS

அலங்காநல்லூர் அருகே ஶ்ரீகாளியம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.

அலங்காநல்லூர் அருகே ஶ்ரீகாளியம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.

 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வைரவநத்தம் ஊராட்சி விட்டங்குளம் மேற்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன், மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

 

இந்த விழாவானது கடந்த 2 நாட்களாக 3 கால யாக பூஜையுடன் மங்கள இசை முழங்க கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாவதி தீபாராதனை நடைபெற்றது.

 

 

தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 

 

தொடர்ந்து கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை மலர்களும், அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விட்டங்குளம் மேற்கு தெரு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

 

CATEGORIES
TAGS