BREAKING NEWS

கும்பகோணம் அருகே சம்பா சாகுபடி பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையால் சேதம் நிவராணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.

கும்பகோணம் அருகே சம்பா சாகுபடி பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையால் சேதம் நிவராணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வடகிழக்கு பருவ மழையால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது.

 

காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்ததால் நெல், வாழை, கரும்புகள் உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில் திருப்பனந்தாள் ஒன்றியத்தில் உள்ள பந்தநல்லூர் அருகே காவனூர்,க ண்ணாரக்குடி, திருப்பனந்தாள், மணிக்குடி, நரிக்குடி, முட்டக்குடி, பருத்திக்குடி உள்ளிட்ட கிராமத்தில் நேற்று காற்று வீசீயதால் வயல்களில் வெள்ளம் சூழ்ந்து பயிரிடப்பட்ட 500 க்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் சாய்ந்து பாதிப்பு அடைந்தது.

 

 

மழையின் காரணமாக அறுவடைக்கு தயராக இருந்த சம்பா பயிர்கள், மேலும் பசுமையான நெல்மணி பயிர்கள் வயல்களில் தரையோடு தரையாக பயிர் சேதம் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

 

சம்பா பயிர்கள் தற்போதைய பருவம் தவறிய தொடர் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டு சேதமடைந்துள்ளது. முறையான வடிகால் கட்டமைப்பு இல்லாத நிலையிலும், நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு காரணமாகவும் மழைநீர் வடிந்து இயல்பு நிலை திரும்ப குறைந்தது ஒரு வாரம் ஆகலாம்.

 

மழை தொடரும் நிலையில் நீரில் மூழ்கியுள்ளன பயிர்கள் அழுகும் ஆபத்து உள்ளது.

 

சம்பா பயிரிடப்பட்டு நன்கு வளர்ந்த நெல் பயிர் ஏக்கருக்கு பல ஆயிரம் செலவு செய்த விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருவதாக கவலை தெரிவித்து வருகின்றனர்.

 

வருவாய் துறை மற்றும் வேளாண்மை துறை இணைந்த முழுமையான கணக்கெடுப்பு பணிகள் தொடங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து போர்கால அடிப்படையில் உடனே தொடங்க வேண்டும்.

 

 

33 சதவீதத்திற்கு மேல் பயிர் சேத பாதிப்புகள் மட்டுமே கணக்கெடுக்கப்படும் என்பதை உச்சவரம்பை நீக்கி ஏக்கருக்கு ரூ.30,000/- நிவாரணம் வழங்க வேண்டும் என்று காவிரி பாசன குத்தகை மாவட்ட விவசாய சங்க தலைவர் அமிர்த.கண்ணன் கூறினார்.

 

CATEGORIES
TAGS