சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் கடந்த 2008 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து2020 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் தொடர்ந்து கொரோனா நோய் தொற்றின் காரணமாக அரசின் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் நடைபெறாமல் இருந்தன இந்நிலையில் தற்போது கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது.
திருக்கோவிலில் உள்ள விமானங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 125 அடி உயரமுள்ள ராஜகோபுர திருப்பணிக்கான பூஜை 78 லட்சம் மதிப்பில் ( ஏக வர்ணம் பூசும் ) இன்று காலை நடைபெற்றது இந்நிகழ்வில் தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி குடும்பத்துடன் கலந்து கொண்டு பூஜை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.